

சிவகாசி,
சிவகாசி பஸ் நிலையத்தின் வெளியே மினி பஸ்கள் நிறுத்தப்படுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கடந்த 13-ந்தேதி தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் உத்தரவின் பேரில் தாசில்தார் ராஜ்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பஸ் நிலையத்தை ஆய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பித்தார். இந்த நிலையில் நேற்று காலை சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழு சிவகாசி பஸ் நிலையம், காந்தி ரோடு, சாத்தூர் ரோடு ஆகிய பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏன் ஏற்படுகிறது? என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகளிடம் விசாரித்தனர். பின்னர் அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வருகிற 26-ந்தேதி சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுக