புழல் ஜெயில் கைதி திடீர் சாவு

புழல் ஜெயில் கைதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
புழல் ஜெயில் கைதி திடீர் சாவு
Published on

கடலூர் அம்பேத்கர் நகர் பெரிய தெருவை சேர்ந்தவர் லோகேஷ் என்ற சந்தோஷ் (வயது 28). இவர் பாலியல் பலாத்கார வழக்கில் சேத்தியாத்தோப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிதம்பரம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த 23-ந் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர், சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வயிற்று வலியால் தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com