கொத்தனார் திடீர் சாவு

கொத்தனார் மயங்கி விழுந்து திடீர் சாவு
கொத்தனார் திடீர் சாவு
Published on

திருக்கனூர்

பாகூர் புதிய காமராஜர் நகரை சேர்ந்தவர் ராமு (வயது 55). கொத்தனார். இவருக்கு செல்வநாயகி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ராமு, திருக்கனூர் அருகே உள்ள குமரா பாளையத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டபோது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் உள்ள ஜிப்மர் கிளை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரி சோதித்த டாக்டர், ராமு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com