கொத்தனார் திடீர் சாவு

கண்டமங்கலம் அருகே வலிப்பு நோய் வந்து கொத்தனார் திடீரென உயிரிழந்தார்.
கொத்தனார் திடீர் சாவு
Published on

கண்டமங்கலம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரி பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 57). கொத்தனார். நேற்று மாலை அவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் உள்ள ஜிப்மர் கிளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தர்மராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com