தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

அருப்புக்கோட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ராம்கோ நகர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் தாமோதரன் (வயது 37). தொழிலாளி. இவருடைய மனைவி உமாமகேஸ்வரி. இவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த தாமோதரன் விருதுநகரில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் தாமோதரன் வராததால் சந்தேகமடைந்த அய்யப்பன் ராம்கோநகரில் உள்ள தாமோதரன் வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அங்கிருந்தவர்கள் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தாமோதரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாமோதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com