தூக்குப்போட்டு லாரி உரிமையாளர் தற்கொலை

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தூக்குப்போட்டு லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர்
Published on

கரூர்,

லாரி உரிமையாளர்

கரூர் தெற்கு காந்திகிராமம் ராம் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் சரவணன் சொந்தமாக லாரி வைத்து அதன் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் லாரி தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரவணன் மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரவணன் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com