காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீர் தற்கொலை

அருப்புக்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் திடீரன தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீர் தற்கொலை
Published on

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநகரம் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆத்திபட்டி ஜெயராம் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் வெளிநாட்டில் உள்ள கணவர் கார்த்திக்குடன் நீண்ட நேரம் பிரியதர்ஷினி போனில் பேசியுள்ளார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பிரியதர்ஷினியின் தாய், அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியதர்ஷினிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால், இதுபற்றி ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் மேல்விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com