3 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

ஜெயங்கொண்டம் அருகே 3 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஜெயங்கொண்டம்,

தகராறு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி (வயது 35), கூலி தொழிலாளி இவருடைய மனைவி சகுந்தலா (26). இவர்களுடைய மகள் திஷானி (8 மாதம்).இந்தநிலையில் சகுந்தலா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். அன்புமணி விசேஷ நாட்களில் மது அருந்துவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி அன்புமணி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதில், அதிருப்தி அடைந்த சகுந்தலா நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டினுள்ள ஒரு அறையில் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகுந்தலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான 5 ஆண்டுகளில் சகுந்தலா இறந்ததால் இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில், பிரேத பரிசோதனை முடிந்து சகுந்தலாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்திற்கு கொண்டு சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com