மேம்பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

மேம்பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
மேம்பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
Published on

மதுரை,

மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 34). இவருக்கு, திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் ஏறி அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை கீழே இறங்கி வரும்படி கூறினர். அதற்கு, பாண்டியராஜன், போலீசார் தன் மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாக கூறி கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். முழு ஊரடங்கு என்பதால் சாலைகள் வெறிச்சோடிய நிலையில் இருந்ததை பயன்படுத்தி, மேம்பாலத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாண்டியராஜன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com