கோடீஸ்வர கிராமம்


கோடீஸ்வர கிராமம்
x

குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள 'மாதபர்' என்ற கிராமம் உலகின் பணக்கார கிராமங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்கு ஏறக்குறைய 92 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளில் 17-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. அவற்றில் இந்த கிராம மக்கள் நிரந்தர வைப்பு தொகையாக 5 ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருக்கிறார்கள்.

தனி நபர் வைப்புத்தொகை மட்டும் சுமார் 15 லட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மாதபர் கிராம மக்களிடம் பணம் செல்வ செழிப்புடன் புழங்குகிறது. அதற்கு காரணம் இந்த கிராமத்தை சேர்ந்த பலர் இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் கனடா போன்ற வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்.

அங்கு கை நிறைய சம்பாதிப்பவர்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு தவறாமல் பணம் அனுப்புகிறார்கள். அந்த பணத்தை சொந்த கிராமத்திலிருக்கும் வங்கிகளில் சேமிக்கவும் செய்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவருமே சேமிப்பதால் கோடிகளில் வங்கி பணம் புரளும் கிராமமாக புகழ் பெற்றுவிட்டது.


Next Story