போதுமான தண்ணீர் பருகாததை உணர்த்தும் அறிகுறிகள்


போதுமான தண்ணீர் பருகாததை உணர்த்தும் அறிகுறிகள்
x

ஒருசில அறிகுறிகள் மூலம் நீரிழப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

உட்கொள்ளும் திரவத்தின் அளவை விட உடலில் இருந்து இழக்கப்படும் திரவத்தின் அளவு அதிகரிக்கும்போது நீரிழப்பு ஏற்படும். அதனை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.

நீரிழப்புக்கான அறிகுறிகள்

உதடுகள் வறண்டு இறுக்கமாக இருக்கும். அல்லது உதட்டில் விரிசல், வெடிப்பு ஏற்படும். உதட்டில் எரிச்சல் உணர்வு, உதட்டு தோல் உரிவது, சிவப்பு நிறத்திற்கு மாறுவது போன்ற அறிகுறிகளும் தோன்றும்.

உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் சருமம் பொலிவை இழக்கும். சருமத்தின் நிறமும் மாறத்தொடங்கும். மந்தமான உணர்வு எட்டிப்பார்க்கும்.

உதடு மட்டுமின்றி ஒட்டுமொத்த சருமத்திலும் அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கும்.

உடலில் காயம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அது குணமாகுவதற்கு தாமதமாகும். நீரிழப்பு காரணமாக வெட்டுக்காயங்களும் குணமாகுவதற்கு அதிக நாட்கள் ஆகும்.

நீரிழப்பை தடுப்பது எப்படி?

* நாள் முழுவதும் போதுமான அளவு ஒருசில அறிகுறிகள் மூலம் நீரிழப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.தண்ணீர் குடிப்பது நீரிழப்பை தடுக்க உதவும். குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பருகும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதற்கான நினைவூட்டல்களை செல்போனில் பதிவு செய்து வைக்கலாம்.

* தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு, கீரை உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள். அவகோடா, நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுப்பொருட்களையும் தவறாமல் சாப்பிடுங்கள்.

* உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க ஷியா வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற ஈரப்பதமூட்டும் பொருட்களை பயன் படுத்துங்கள்.

* வெதுவெதுப்பான நீர் கொண்டு சருமத்தை கழுவக்கூடாது. நீரிழப்பு ஏற்படும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். அதுபோல் தலைமுடியை உலர்த்துவதற்கு வெப்பத்தை உமிழும் சாதனங்களை பயன்படுத்துவதும் கூடாது.

* சூரியனின் ஆதிக்கம் மிகுந்திருக்கும் காலங்களில் உடலை முழுவதுமாக மூடும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும்.

* காபின் மற்றும் ஆல்கஹால் இரண்டும் டையூரிடிக் விளைவை ஏற்படுத்தும். அவை கலந்த பானங்களை அதிகம் பருகுவது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.


Next Story