தண்ணீர் பருகும்போது தவிர்க்க வேண்டியவை.......!!!


தண்ணீர் பருகும்போது தவிர்க்க வேண்டியவை.......!!!
x

உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் இன்றியமையாதது. உடலின் வெப்பநிலையை பராமரிக்கவும், உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் தண்ணீர் உதவும்.

உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் இன்றியமையாதது. உடலின் வெப்பநிலையை பராமரிக்கவும், உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் தண்ணீர் உதவும். போதுமான அளவு தண்ணீர் பருகுவது செரிமானத்தை மேம்படுத்தும். உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சுவதற்கும் துணைபுரியும். நீரிழப்பு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு செரிமான பிரச்சினைகளை தடுத்து உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் பணியை மேற்கொள்கிறது. தண்ணீர் பருகும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

* தண்ணீரை மெதுவாகத்தான் பருக வேண்டும். சிலர் வேக வேகமாக தண்ணீரை விழுங்குவார்கள். அப்படி விழுங்குவது வயிற்று நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தனது இயல்பான செயல்பாட்டில் இருந்து விலகி நரம்புகள் பதற்றத்திற்குள்ளாகும். இதனால் உடலில் இருந்து நச்சுக்கள் அதிக அளவில் வெளியேறும். அப்போது தேவையற்ற நீரிழப்பு ஏற்படும். இதனால் உடலில் திரவ நிலையில் ஏற்றத்தாழ்வு உண்டாகும். அது அஜீரணத்திற்கு வழிவகுத்துவிடும். எனவே தண்ணீரை கொஞ்சம், கொஞ்சமாக பருக வேண்டும்.

* ஆயுர்வேதத்தின் படி, உணவு உண்பதற்கு சற்று முன் தண்ணீர் பருகுவது செரிமான செயல்பாடுகளை குறைக்கும். சாப்பிட்ட உடனேயே தண்ணீர் பருகுவது செரிமானத்தை அதிகரிக்க செய்துவிடும். இவை இரண்டுமே சீரான செரிமான செயல்பாட்டுக்கு ஏற்றதல்ல. உடல் பருமன் பிரச்சினையையும் உண்டாக்கக்கூடும். சாப்பிடு வதற்கு முன்போ, பின்போ தண்ணீர் பருகுவதற்கு குறிப்பிட்ட காலம் இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீருக்கும், உணவுக்கும் இடையே குறைந்தபட்சம் 45 நிமிடம் இடைவெளி இருப்பது உடலுக்கு நன்மை தரும் என்கிறது, ஆயுர்வேதம்.

* பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் பருகுவதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அதிலும் தினமும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் பருகும் பழக்கத்தை அறவே கைவிட வேண்டும். நீண்ட காலம் தொடர்ந்து பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீரை உட்கொள்வது புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பெண்கள் விரைவாக பருவமடைவதற்கு வித்திடும். ஆண்களை பொறுத்தவரை விந்தணுக்களின் உற்பத்தி குறைவதற்கு காரணமாகிவிடும். பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்று பொருளை பயன்படுத்துவது நல்லது.

* நின்று கொண்டே தண்ணீர் பருகுவதும் தவறானது. குறிப்பாக நின்ற நிலையில் அண்ணாந்து பார்த்தபடி தண்ணீர் பருகும்போது வயிற்றுக்குள் தண்ணீர் சரியாக நுழையாது. வேறு உறுப்புகளுக்கு தண்ணீர் சென்றடையக்கூடும். அப்படி தண்ணீர் சீரற்ற நிலையில் உடல் உறுப்புகளை எட்டுவது ஆரோக்கிய குறைபாடுகளுக்கு காரணமாகிவிடும்.


Next Story