

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர், சாய்பல்லவி. தென்னிந்தியாவில் உள்ள பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது அவர், 'கார்கி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கவுதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். 'கார்கி' படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் வெளியிட இருக்கிறது. இதை சாய்பல்லவி மகிழ்ச்சியுடன் அறிவித்து இருக்கிறார்.