

கச்சிராயப்பாளையம்
திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவன் மணிகண்டன் மகன் சுரேஷ்(வயது 11). இவன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சுரேஷ் அவனது நண்பர்களான பூமிநாதன், வெங்கடேஷ், சதீஷ் ஆகியோருடன் 2 மோட்டார் சைக்கிள்களில் கல்வராயன்மலைக்கு வந்தனர்.
பின்னர் இவர்கள் அங்குள்ள சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது சுரேஷ் கல்லில் வழுக்கி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்களும், கரியாலூர் போலீசாரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவன் சுரேசை தேடினர். ஆனால் அவனை காணவில்லை. இதையடுத்து நேற்று 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.