குழந்தை உள்பட 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

புதுச்சேரியில் குழந்தை உள்பட 6 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை உள்பட 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
Published on

புதுச்சேரி, அக்.12-

புதுச்சேரியில் குழந்தை உள்பட 6 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவல் நேற்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று 330 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்றைய நிலவரப்படி 376 குழந்தைகள் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். இதில் 26 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 94 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் காய்ச்சல் பரவும் அதே சூழ்நிலையில் பன்றிக்காய்ச்சலும் வேகமாக பரவுவது மக்களை அச்சமடைய செய்துள்ளது. புதுவையில் இன்று 71 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒரு குழந்தை உள்பட 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

39 பேருக்கு கொரோனா

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,269 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 39 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் 31 பேரும், காரைக்காலில் 5 பேரும், ஏனாமில் 2 பேரும், மாகியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 25 பேர் குணமடைந்த நிலையில், தற்போது ஆஸ்பத்திரிகளில் 6 பேர், வீடுகளில் 166 பேர் என 172 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று  முதல் தவணை தடுப்பூசியை 18 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 343 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 578 பேரும் செலுத்திக்கொண்டனர். புதுவையில் இதுவரை 22 லட்சத்து 43 ஆயிரத்து 818 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com