சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து, பிரணாய் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டனின் பிவி சிந்து, பிரணாய் இருவரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
image credit: ndtv.com
image credit: ndtv.com
Published on

பாசெல்,

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பிவி சிந்து காலிறுதி சுற்றில் கனடாவின் மிச்செல் லியை எதிர்கொண்டார், 36 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் சிந்து 21-10, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதே போல் பிரணாய் 21-16, 21-16 என்ற செட் கணக்கில் காஷ்யப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டி 43 நிமிடங்கள் நீடித்தது.

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் சிந்து, தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங்கை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com