த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருக்கனூர் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

காரைக்கால்

நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் அவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி காரைக்காலில் த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாநில செயலாளர் அப்துல் ரஹிம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன், தி.மு.க. மாணவர் அணி மாநில செயலாளர் பெரியார் ஜவஹர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில நிர்வாகி வின்சென்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி திரு-பட்டினம் தொகுதி பொறுப்பாளர் விடுதலை கணல், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் கவுஸ் ஹமீது உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com