மொபட் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி

பழனி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்துபோனார்.
மொபட் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி
Published on

பழனி:

பழனி அருகே உள்ள சின்னாரக்கவுண்டன்வலசு கிராமத்தை சேர்ந்த நாட்டுத்துரை மகன் சதீஷ்குமார் (வயது 19). இவர் பழனியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் சதீஷ்குமார் நேற்று மொபட்டில் பழனிக்கு சென்றுவிட்டு மீண்டும் சின்னாரக்கவுண்டன்வலசு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பழனியை அடுத்த கருப்பணகவுண்டன்வலசு பகுதியில் அவர் வந்தபோது, எதிரே தாராபுரத்தில் இருந்து பழனி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கிவீசப்பட்ட சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் நேற்று இறந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com