ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி வெற்றி

2019-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி வெற்றி
Published on

மக்காவ்,

இதில் மக்காவ் நாட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மக்காவ் அணியை எதிர்கொண்டது. உலக தரவரிசையில் 96-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக தரவரிசையில் 183-வது இடத்தில் உள்ள மக்காவ் அணிக்கு எதிராக தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

மாற்று வீரராக களம் கண்ட இந்திய வீரர் பல்வந்த் சிங் 57-வது மற்றும் 82-வது நிமிடங்களில் கோல் அடித்தார். மக்காவ் அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மக்காவ் அணியை தோற்கடித்து 3-வது வெற்றியை ருசித்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. ஆசிய போட்டியின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இந்திய அணி நீடிக்கிறது. சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com