பழனியில் முதியவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

பழனியில் முதியவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது உறுதியானது.
பழனியில் முதியவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு
Published on

பழனி:

கொரோனா பாதிப்புடன், கருப்பு பூஞ்சை நாயும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் பழனியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் நேற்று பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அப்போது அந்த முதியவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், முதியவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் இருந்தார். இதற்கிடையே அவருக்கு தற்போது கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com