கர்நாடகத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 9,981 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 45 பேர் குணம் அடைந்தனர். இதில் பெங்களூருவில் 49 பேர் உள்ளனர். தற்போது மாநிலத்தில் 1,441 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1-க்கும் கீழ் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் யாரும் இறக்கவில்லை.

கர்நாடகத்தில் 24 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. அதாவது நேற்று முன்தினம் 46 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் அது நேற்று 56 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com