தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருமருகலில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Published on

திட்டச்சேரி, மே.10-

திருமருகல் வடக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு அவைத்தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன்வரவேற்றார்.மாவட்ட செயலாளர் கவுதமன் கலந்து கொண்டு பேசினர்.தமிழக முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டில் சிறப்பாக ஆட்சி செய்து இந்தியாவின் சிறந்த முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவிப்பது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 3-ந் தேதி கிளை கழகம் தோறும் கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, ஊராட்சி கிளை கழகங்களில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com