அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை:

புதுடெல்லியில் வருகிற 26-ந்தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் தமிழக அரசு சார்பில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியின் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதையொட்டி நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாஸ்கரன், பகுஜன் சமாஜ் கட்சி தேவேந்திரன் ஆகியோர் பேசினர்.

இதில் மத்திய அரசுக்கு எதிராக கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com