குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா

இடங்கணசாலை நகராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா
Published on

இளம்பிள்ளை:-

இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு தூதனூர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 2-வது வார்டு கவுன்சிலர் மாதேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இடங்கணசாலை நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com