பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Published on

அரியலூர்,

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான அம்பேத்கர் பற்றிய பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டிகள் நடந்தது. இதில் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி வினோதராணி முதலிடமும், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-1 மாணவி சுஜீதா 2-வது இடமும், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவர் ராஜூ 3-வது இடமும் பிடித்தனர். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.எஸ்சி. (வேதியியல்) 3-ம் ஆண்டு மாணவி காவியா முதலிடமும், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை கல்லூரியின் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு மாணவி பவித்ரா 2-வது இடமும், ஜெயங்கொண்டம் அரசு கலை கல்லூரியின் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு மாணவி கனிமொழி 3-வது இடமும் பிடித்தனர். சிறப்பு பரிசுக்கு அழகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் சூரியதரிசனும், பரணம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி தமிழ்இனியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும், மாவட்ட கலெக்டரால் விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் பங்கேற்றவர்களில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் 2 பேர் தனியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது என்று தமிழ் வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com