

அவினாசி சேவூர் சூளை பகுதியில் பட்டப்பகலில் ஒரு பாம்பு ரோட்டின் குறுக்கே மெதுவாக ஊர்ந்து சென்றது. அப்போது ரோட்டில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி பாம்பு ரோட்டை கடந்த பிறகு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அவினாசியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் அங்கு வந்து செடி மறைவில் பதுங்கியிருந்தஅந்த பாம்பை லாவகமாக பிடித்தார். இதேபோல் அவினாசி வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்த 2 பாம்புகள், அனைப்புதூர் தண்ணீர்தொட்டி அருகே இருந்த நாகபாம்பு ஆகியவற்றை பிடித்துகாட்டுப் பகுதியில் விடப்பட்டது.