பரோலில் சென்ற வேலூர் ஜெயில் கைதி தலைமறைவு

வேலூர் ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற கைதி தலைமறைவாகி விட்டார்.
பரோலில் சென்ற வேலூர் ஜெயில் கைதி தலைமறைவு
Published on

வேலூர்

வேலூர் ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற கைதி தலைமறைவாகி விட்டார்.

வேலூர் விருபாட்சிபுரம் வாணியங்குளம் பகுதியை சேர்ந்தவர் வேலு என்ற வேல்முருகன் (வயது 27). இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஓட்டேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதில் தண்டனை பெற்ற வேல்முருகன் புதுக்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் 2017-ம் ஆண்டு வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி பரோல் கேட்டு விண்ணப்பித்தார். அவருக்கு 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஜெயிலிலிருந்து பரோலில் சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் ஜெயிலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து வேலூர் ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தலைமறைவான வேல்முருகனை தேடி வருகின்றனர்.

வேல்முருகன் ஜெயிலுக்கு திரும்பியதாகவும் அப்போது ஜெயில் அதிகாரிகள், கொரோனா பரிசோதனை செய்து கொண்டு அதற்கான சான்றிதழுடன் வரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்வதாக ஜெயிலில் இருந்து சென்றவர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com