கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

கமல் நடித்துள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை
Published on

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு அரங்கில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிரேன் சரிந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டதால் பட வேலைகள் முடங்கின. தற்போது தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். அதுபோல், கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கிறார்.

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி பட நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றது. தற்போது இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு விரைவில் படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து தற்போது கர்ப்பமாக இருப்பதால் படத்தில் நடிக்க முடியாது என்று வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவருக்கு பதில் வேறு கதாநாயகியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது. தற்போது காஜல் அகர்வாலுக்கு பதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை நீக்கி விட்டு தமன்னாவை ஆரம்பத்தில் இருந்து நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com