

சென்னை,
சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க., ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஆதரவு கேட்டு தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் வி.சி.க.வுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
த.வெ.க.வுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள், வி.சி.க. ஆதரவு அளிக்குமா? அல்லது அதனை தட்டிக்கழிக்குமா? என்பது புரியாத புதிராகவே தொடருகிறது. இதுதொடர்பாக அவர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டு முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தவெக ஆட்சியமைக்க போதிய ஆதரவு இல்லாத நிலையில் அக்கட்சியை ஆதரிப்பது குறித்து இடதுசாரிகள் மற்றும் விசிக இன்று முடிவு செய்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு, மாநிலக்குழுவை கூட்டி முடிவெடுக்கிறது. திருமாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விஜய் ஆதரவு கேட்ட நிலையில், இடதுசாரிகளுடன் இணைந்து முடிவு எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.