வாக்கு சதவீதம் வெறும் 0.6% மட்டுமே உயர்ந்துள்ளது- ஆர்.எஸ்.பாரதி பேட்டி

0.6 சதவீதம் என்பது ரொம்ப ரொம்ப குறைவானது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
 வாக்கு சதவீதம் வெறும்  0.6% மட்டுமே உயர்ந்துள்ளது- ஆர்.எஸ்.பாரதி பேட்டி
Published on

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1967, 1971, 1989, 1996, 2006, 2021 இந்த 6 சட்டசபை தேர்தலில் என்ன மாதிரியான மனநிலை இருந்ததோ, அதே மனநிலை தான் இன்றும் உள்ளது. அதுமட்டும் இல்லை 2024 நாடாளுமன்ற தேர்தலில், எவ்வளவு ஓட்டுகள் பதிவாகியதோ அதே எண்ணிக்கையிலான ஓட்டுக்கள் தான் பதிவாகி இருக்கிறது. அந்த தேர்தலில் நாங்கள் 40/40 வெற்றி பெற்றோம். இப்போது 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அழகாக தெரிகின்றது. கணக்கு சரியாக வருகிறது.

வாக்கு சதவீதம் உயர்ந்து உள்ளது என்று சொல்வது தவறு.. போன முறை எவ்வளவு வாக்குகள் பதிவாகியது என்று பாருங்கள்.. காரணம், சதவீதம் என்று பார்த்தீங்க என்றால் 65 லட்சம் ஓட்டுகளை நீக்கிவிட்டனர். அப்படி பார்க்கும் போது வாக்கு சதவீதம் கூடினது போன்று தெரியும். போன முறை எவ்வளவு வாக்குகள் பதிவாகியது. 4 கோடியே 71 லட்சம் வாக்குகள் பதிவாகியது. அதே நம்பர் தான் இப்போதும் பதிவாகி இருக்கிறது. 0.6 சதவீதம் மட்டுமே இப்போது வந்த கணக்கின்படி அதிகரித்து இருக்கிறது. 0.6 என்பது ரொம்ப ரொம்ப குறைவானது” என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com