தமிழரசன்

சென்னையில், 15 நாட்கள் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை 4 கேமரா மூலம் படமாக்கினோம், டாக்டர் வேடத்தில் நடிக்கிறார் சுரேஷ்கோபி, ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா "தமிழரசன்" படத்தின் முன்னோட்டம்.
தமிழரசன்
Published on

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் தமிழரசன் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில், அவர் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அவருடைய மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் முக்கிய வில்லனாக நடிக்கிறார். பூமிகா, யோகி பாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோருடன் டைரக்டர் மோகன்ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்கிறார். கவுசல்யா ராணி தயாரிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம்-டைரக்ஷன்: பாபு யோகேஸ்வரன். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் படமாக்கப்பட்டன. முக்கிய காட்சிகளை அசாம் மாநிலத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

படத்தை பற்றி டைரக்டர் பாபு யோகேஸ்வரன் கூறும்போது, இந்த படத்தில் கல்லூரி மாணவர்களின் போராட்ட காட்சி இடம்பெறுகிறது. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடும் காட்சியை 4 கேமராக்கள் மூலம் படமாக்கினோம். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார்.

டாக்டர் வேடத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி படத்தில், சுரேஷ்கோபி!

வி ஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் டைரக்டு செய்து வருகிறார். இதில், விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

இந்த படத்தில், பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி டாக்டராக, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விக்ரம் நடித்த ஐ படத்திலும் சுரேஷ்கோபி டாக்டர் வேடத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு அவர் நடிக்கும் தமிழ் படம், இதுதான்.

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி யுடன் பூமிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார்.

தமிழரசன் படத்தில் ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் தமிழரசன் படத்தில், கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், சோனுசூட், யோகிபாபு, ரோபோ சங்கர், கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சாமிநாதன், முனீஸ்காந்த், டைரக்டர் மோகன்ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார். 2 வருடங்களுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் சங்கீதா வில்லியாக நடித்தார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்காமல், சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இரண்டு வருடங்களுக்குப்பின், அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் அமையாததால் நடிக்காமல் ஒதுங்கியிருந்தேன். தமிழரசன் படத்தில், என் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்படும் விதத்தில் இருந்ததால், நடிக்க சம்மதித்தேன். மிகப்பெரிய ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டர் வேடம், இது. கனமான கதாபாத்திரம் என்றார்.

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப் பதிவு செய்கிறார். கதை- திரைக்கதை-வசனம்- டைரக்ஷன்: பாபு யோகேஸ்வரன். கவுசல்யா ராணி தயாரிக்கிறார். படப் பிடிப்பு சென்னையில் இரவு- பகலாக நடை பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com