தரிகொண்ட வெங்கமாம்பா நினைவு நாள்.. திருப்பதியில் புஷ்பாஞ்சலி

புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், வெங்கமாம்பாவின் சந்ததியினர் கலந்துகொண்டனர்.
Published on

திருப்பதி ஏழுமலையானின் பெருமையை போற்றி பல பாடல்களை இயற்றிய பெண் துறவி கவிதாயினி தரிகொண்ட வெங்கமாம்பாவின் 208-வது ஆண்டு நினைவு நாள், அவரின் அவதார தலமான தரிகொண்டாவிலும், திருப்பதியிலும் நேற்று அனுசரிக்கப்பட்டது.

திருப்பதி திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், வெங்கமாம்பாவின் சந்ததியினர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருப்பதி எம்.ஆர்.பள்ளி சர்க்கிளில் உள்ள வெங்கமாம்பா உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலையரங்கில் வெங்கமாம்பா கீர்த்தனைகள், ஸ்ரீனிவாச கல்யாணம் குறித்த ஹரிகதை நிகழ்ச்சி மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com