மதுக்கடைகள் 4 நாட்கள் மூடல்

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்களில் மதுக்கடைகள் 4 நாட்கள் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மதுக்கடைகள் 4 நாட்கள் மூடல்
Published on

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் வருகிற 9-ந்தேதி நடக்கிறது. எனவே, தேர்தல் நடக்கும் பகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு 5 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) முதல் 9-ந்தேதி வரை 3 நாட்களுக்கு மூடப்பட வேண்டும்.

அதுபோல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளான வருகிற 12-ந்தேதியும் இந்த பகுதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும். மதுக்கடை மூடப்பட்ட பகுதிகளில் மதுவிற்பனை எதுவும் நடக்கக்கூடாது. அதையும் மீறி யாரேனும் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com