தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரி கவ்ஹீத் ஜமா அத் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் புதுச்சேரி கடற்கரையில் சிறப்பு தொழுகை நடத்தப்படும். இந்த ஆண்டு சிறப்பு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரு வீதியில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொருளாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அன்சாரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com