வீட்டுக்கடன் முன் தவணைக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை

வங்கியில் வீட்டு கடன் பெற்று, சொந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை பிரி-இஎம்ஐ முறையில் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
வீட்டுக்கடன் முன் தவணைக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை
Published on

அவ்வாறு செலுத்தப்பட்ட வட்டிக்கான வரி சலுகையை, வீடு கட்டி முடித்து கடனுக்கான தவணைகளை கட்ட தொடங்கிய முதல் ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டு காலத்துக்குள் பெற முடியும். அந்த வட்டியை ஐந்து சம தவணைகளாக பிரித்து ஐந்து ஆண்டுகளுக்கான வரி சலுகையாக பெறலாம்.

வட்டி கணக்கீடு

அதாவது, 2014 மே மாதத்தில் ரூ. 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றவர் வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடையும் வரையில் வட்டி மட்டும் செலுத்தி வருகிறார் என்ற நிலையில் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியாக செலுத்தப்பட்டிருக்கும்.

வரிச்சலுகை கணக்கீடு

இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் மாதாந்திர தவணையை செலுத்த வேண்டும். முன்பு வட்டியாக செலுத்தப்பட்ட ரூ. 2 லட்சம் வட்டியை 5 சம தவணைகளாக பிரித்து, ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் என்ற அளவில் 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை கணக்கில் கழித்துக்கொள்ளலாம். 2016-17-ம் ஆண்டில் வட்டி ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 40 ஆயிரம் ஆக மொத்தமாக ரூ. 1,40,000 கழித்துக் கொள்ள இயலும்.

வாடகை வருமானம்

ஒருவேளை கடன் தொகை ரூ. 20 லட்சமாக, இருக்கும் பட்சத்தில் 2016-17 ஆண்டுகளில் வட்டியாக ரூ. 2 லட்சம் செலுத்தப்பட வேண்டியதாக இருக்கும். அப்போது, பிரி இ.எம்.ஐ வட்டி ரூ. 80 ஆயிரமாக இருக்கும். அப்போது அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை பெற முடியும். ஒரு வேளை வீடு வாடகைக்கு விடப்பட்டு, வாடகையை வருமானமாக காட்டி இருக்கும் பட்சத்தில் அதன் முழு வட்டிக்கும் வரிச் சலுகையை பெறலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com