

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனம் ஐபோன் செல்போன்கள், ஐமேக், ஆப்பிள் லேப்டாப், டெஸ்க் டாப், ஐபேட், ஆப்பிள் டிவி உள்பட பல்வேறு மின் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மின் சாதனங்களுக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களும், வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது புதிய மின் சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்தி விற்பனையை தொடங்கும் ஆப்பிள் நிறுவனம் பின்னர் இந்தியாவிலும் அந்த மின் சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்தியாவில் 5 புதிய மின் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அம்சங்களுடன் மேக்புக் புரோ மாடல்கள், ஒஎல்இடி ஐபேட் மினி மின் சாதனங்களின் வகைகளை இந்தியாவில் விற்பனைக்கு ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஐபேட் மினி (2026) - ஒஎல்இடி மாடலை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி வகைகளில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சங்கள் கொண்ட இந்த ஐபேட் மினி விலை குறைந்தபட்சம் ரூ. 82,900ல் இருந்து அதிகபட்சம் ரு. 1,00,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபேட் மினி நவம்பர் 6ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஐபேட் மினியின் பிரி ஆட்டர் கடந்த 28ம் தேதி தொடங்கியது.
அதேபோல், 24 இன்ச் புதிய ஐமேக் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஐமேக்கில் எம்6 சிப் பொருத்தப்பட்டுள்ளது. 24 இன்ச் திரையுடன் 4.5 கே ரிடினா டிஸ்பிளே உடன் 7 வகையான வண்ணங்களில் இந்த ஐமேக் வரும் 6ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஐமேக் விலை குறைந்தபட்சம் ரூ. 1,74,900 முதல் அதிகபட்சம் ரூ. 1,99,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 14 இன்ச் மேக்புக் புரோ விற்பனைக்கு வர உள்ளது. எம்6 சிப் பொருத்தப்பட்டுள்ள இந்த மேக்புக் புரோ 6 வ்ண்ணங்களில் வர உள்ளது. பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த மேக்புக் புரோ விலை ரூ. 2,39,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மேக்புக் வரும் 6ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
அதேபோல், புரோ எல்இடி எக்ஸ்டிஆர் அம்சத்துடன் ஒஎல்இடி மேக்புக் புரோ விற்பனைக்கு வர உள்ளது. 14 இன்ச், 16 இன்ச்களில் மேக்புக் புரோ விற்பனைக்கு வ உள்ளது. எம்5 பிரோ, எம்5 மேக்ஸ் சிப்கள் இந்த மேக்புக் புரோவில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மேக்புக் புரோ 14 இன்ச் தொடக்க விலை ரூ. 3,49,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேக்புக் புரோ 16 இன்ச் தொடக்க விலை ரூ. 4,09,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மேக்புக் புரோ வரும் 9ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. அதேவேளை, முன்பதிவு கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.