

லாக்ட் சாட் வசதி, உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் மற்றவர்கள் உரையாடல்களைப் பார்ப்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. அலுவலக பணிகள், சொந்த விஷயங்கள் வரை பலரும் ஏஐயிடம் பகிர்ந்து,விவரம் பெற்றுக்கொள்வதை பார்க்க முடிகிறது. இவற்றை மற்றவர்கள் பார்த்து விடாமல் பாதுகாக்க, குறிப்பிட்ட உரையாடல்களைப் பூட்டி வைக்கும் 'லாக்டு சாட்ஸ்' வசதியை சாட் ஜி.பி.டி.யின் தாய் நிறுவனமான ஓபன் ஏ.ஐ. அறிமுகப்படுத்தியுள்ளது.
பூட்டப்பட்ட உரையாடல்கள் வழக்கமான பட்டியலிலும் தேடல் முடிவுகளிலும் தோன்றாது. அவற்றைத் திறக்க ரகசிய எண்ணை உள்ளிடலாம் அல்லது ஆதரவு அளிக்கும் சாதனங்களில் கைரேகை, முக அடையாளத்தைப் பயன்படுத்தலாம்.ஒரே சாதனத்தைப் பலருடன் பகிர்பவர்கள், திரையைப் பிறருக்குக் காட்டிப் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். ரகசிய உரையாடல்களைத் தனியாகப் பாதுகாக்க உதவும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தும்போது, ரகசிய எண்ணை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதும் அவசியம்
- நீங்கள் லாக் செய்ய விரும்பும் சாட்களைத் தேர்ந்தெடுத்து, பிண் (PIN) எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அல்லது பேஸ் ஐடி ( Face ID), கைரேகை வசதியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் அந்த உரையாடல்கள் வழக்கமான சாட் ஹிஸ்டரியில் இருந்து மறைக்கப்படும்.
- குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும் தற்காலிக சாட் வசதியைப் போல அல்லாமல், லாக்டு சாட் உரையாடல்கள் தொடர்ந்து சேமிக்கப்பட்டிருக்கும். கூடுதல் பாதுகாப்பு அடுக்கின் பின்னால் அவை மறைத்து வைக்கப்படும்.
- இருப்பினும், இது End-to-End Encryption வசதியுடன் கூடிய தனிப்பட்ட சேமிப்புப் பெட்டி அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். லாக்ட் சாட் வசதி, உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் மற்றவர்கள் உரையாடல்களைப் பார்ப்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால், இது முற்றிலும் தனித்துவமான அல்லது முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட சேமிப்பகத்தை உருவாக்காது.