

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை இனி தொலைக்காட்சியிலும் பயன்படுத்தும் வகையில் இன்ஸ்டகிராம் ஃபார் டிவி என்ற புதிய வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.மும்பையில் நடைபெற்ற மெட்டா நிறுவனத்தின் வருடாந்திர படைப்பாளர்கள் நிகழ்ச்சியான ஹவுஸ் ஆப் இன்ஸ்டகிராமில்-ல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆப்பிள் டிவி, அமேசான் ஃபயர் மற்றும் கூகுள் டிவி ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் தொலைக்காட்சிகளில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இன்னும் சில நாட்களில் இந்தியாவில் இந்தச் சேவை அறிமுகமாகும் என மெட்டா தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சியின் பெரிய திரையில் இன்ஸ்டகிராம் ரீல்ஸ் மற்றும் ஸ்டோரீஸ் பார்க்கலாம். ஒரே தொலைக்காட்சியில் அதிகபட்சம் 5 இன்ஸ்டாகிராம் கணக்குகளை இணைக்கலாம். பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரீல்ஸ் வீடியோக்களைத் தனித்தனியாகப் பார்க்க முடியும். ரீல்ஸ் வீடியோக்கள் தானாகவே அடுத்தடுத்து இயங்கும்.தொலைக்காட்சி ரிமோட் மூலம் வீடியோக்களைக் கட்டுப்படுத்தலாம்.