கேனன் எம்.எஸ் 500 கேமரா அறிமுகம்


கேனன் எம்.எஸ் 500 கேமரா அறிமுகம்
x

கேனன் நிறுவனம் புதிதாக எம்.எஸ் 500 என்ற புதிய ரக அல்ட்ரா உயர் உணர்திறன் கொண்ட கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள ஸ்பாட் சென்சார் வண்ண வீடியோகாட்சிகளை பதிவு செய்ய உதவுகிறது. இது காட்சிகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும் திறன் கொண்டது.

ஒற்றை போட்டான் அவலாஞ்ச் டையோடு ஸ்பாட் எனப்படும் நுட்பம் இதில் உள்ளதால் காட்சிகளை அதன் இயல்பு நிலையிலேயே பதிவு செய்ய உதவுகிறது. இரவு நேரங்களில் காட்சிகளைப் பதிவு செய்ய இதில் உள்ள கிரிஸ்ப் எல்.எம்.ஜி 2 என்ற நுட்பம் உதவியாக இருக்கும். இதனால் இரவு, பகல் என எந்த நேரத்திலும் காட்சிகளைத் துல்லியமாக பதிவு செய்ய இந்த கேமரா பயன்படும். இதன் விலை சுமார் ரூ.20.69 லட்சம்.


Next Story