சென்ஹைஸர் சவுண்ட் பார் அறிமுகம்


சென்ஹைஸர் சவுண்ட் பார் அறிமுகம்
x

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் சென்ஹைஸர் நிறுவனம் புதிதாக அம்பியோ என்ற பெயரில் சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது. இது முப்பரிமாண அளவில் இசையை வெளிப்படுத்தும். இனிய இசையை உங்கள் விருப்பத்துக்கேற்ற வகையில் அமைக்கும் வசதி கொண்டது.

இதில் டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் ஏர் பிளே 2, ஸ்போர்டிபை கனெக்ட், டிடால் கனெக்ட், கூகுள் அசிஸ்டன்ட், அலெக்ஸா உள்ளிட்ட குரல்வழி கட்டுப்பாடு மூலமும் செயல்படுத்த முடியும். மொத்தம் 400 வாட் திறனை வெளிப்படுத்தும் இது 9 ஸ்பீக்கர்களைக் கொண்டது. ஆடியோ பிராசஸிங்கிற்கு குவாட் கோர் பிராசஸர் உள்ளது. வை-பை மற்றும் புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் எடை 6.3 கி.கி.

இந்த சவுண்ட்பாரின் விலை சுமார் ரூ.1.40 லட்சம்.


Next Story