ஜாப்ரா எலைட் 8 மற்றும் எலைட் 10 வயர்லெஸ் இயர்போன்


ஜாப்ரா எலைட் 8 மற்றும் எலைட் 10 வயர்லெஸ் இயர்போன்
x

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜாப்ரா நிறுவனம் எலைட் 8 மற்றும் எலைட் 10 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு மாடலுமே டால்பி அட்மோஸ் சிஸ்டம் கொண்டது. இதில் எலைட் 8 மாடல் உறுதியான மற்றும் நீடித்து உழைக்கும் வகையிலான தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஈரப்பதம், அதிகபட்ச வெப்பநிலை, மழை, உயர் மலைப் பிராந்தியம் உள்ளிட்ட சூழலிலும் இது சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுப்புற இரைச்சலை முற்றிலு மாகத் தவிர்க்க டால்பி அட்மோஸ் அடாப்டிவ் ஹைபிரிட் நுட்பம் உள்ளது. எலைட் 8 மாடல் 8 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். இதன் சார்ஜிங் கேசில் 32 மணி நேரம் செயல் படுவதற்குத் தேவையான மின்திறன் சேமிக்கப்பட்டுள்ளது. எலைட் 10 மாடல் இயர்போன் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படும். இதன் சார்ஜிங் கேசில் 27 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மின்திறன் சேமிக்கப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்ட இதனை ஸ்மார்ட் கடிகாரத்துடனும் இணைத்துக் கொள்ள முடியும்.

கருப்பு, கிரே, கேரமல் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள எலைட் 8 மாடலின் விலை சுமார் ரூ.17,999. கிரீம், கோகோ, கருப்பு உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள எலைட் 10 மாடலின் விலை சுமார் ரூ.20,999.


Next Story