மெகாபுக் லேப்டாப்


மெகாபுக் லேப்டாப்
x

மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் டெக்னோ நிறுவனம் புதிதாக மெகாபுக் டி 1 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இது 14.8 மி.மீ. தடிமனும், 1.5 கி.கி. எடையும் கொண்டதாக வெளிவந்துள்ளது. உறுதியாக உழைக்கும் வகையில் நானோ அலுமினிய மேல்பாகத்தைக் கொண்டுள்ளது. நீலம், கிரே, சில்வர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். 15.6 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரை இடம் பெற்றுள்ளது.

இதில் இன்டெல் 11-வது தலைமுறை பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கோர் ஐ 3, கோர் ஐ 5, கோர் ஐ 7 உள்ளிட்ட மாடல்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். 8 ஜி.பி., 12 ஜி.பி. மற்றும் 16 ஜி.பி. ரேம் கொண்டது. இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை அதிகரித்துக் கொள்ளலாம்.

இதில் 70 வாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ள தால் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டால் 17.5 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். பேட்டரி விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 65 வாட் அல்ட்ரா சார்ஜர் அளிக்கப்படுகிறது. விரல் ரேகை அடிப்படையில் இயங்கும் பொத்தான் வசதி கொண்டது.

இதன் விலை சுமார் ரூ.39,999 முதல் ஆரம்பமாகிறது.


Next Story