

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் மைக்ரோசாப்ட். டெக் துறையில் முன்னணி வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் சுமார் 2.23 லட்சம் நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வரும் நிலையில், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மைக்ரோசாப்ட் அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 60,000 பேருக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 27 சதவீதத்தினை விருப்ப ஓய்வில் அனுப்ப முன்வந்துள்ளது. டேடா செண்டர், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அவர்களுக்கு விருப்ப ஓய்வு எதுவும் கிடையாது. நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள், தரவு மையங்கள் உள்ளிட்டவற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. இதற்கிடையே செலவுகளைக் கட்டுப்படுத்தவும், நிறுவனத்தின் பணியாளர் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் இந்த விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிக்கும் இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டம் இதுவாகும். ஏற்கனவே ஏஐ ஆதிக்கத்தால் அமேசான், மெட்டா உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பை கையில் எடுத்துள்ள நிலையில், மைக்ரோசாப்டின் இந்த முடிவு ஐடி துறை ஊழியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.