நிக்கான் மிரர்லெஸ் கேமரா


நிக்கான் மிரர்லெஸ் கேமரா
x

நிக்கான் நிறுவனம் புதிதாக மிரர்லெஸ் கேமராவை நிக்கான் இஸட் 9 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

புகைப்படக் கருவிகள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் நிக்கான் நிறுவனம் புதிதாக மிரர்லெஸ் கேமராவை நிக்கான் இஸட் 9 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் எக்ஸ்பீட் 7 இமேஜ் பிராசஸிங் வசதி உள்ளது. புகைப்படம் மட்டுமின்றி இதில் வீடியோ காட்சிகளையும் பதிவு செய்ய முடியும். மேம்பட்ட அதிர்வுகளைக் குறைக்கும் நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கைகள் லேசாக அசைந்தாலும் காட்சிகள் துல்லியமாகப் பதிவாகும். ஆட்டோபோகஸ் வசதி கொண்டது.

மேலும் மோனோகுரோம் செலக்டர் வசதி உள்ளதால் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் தனித்தனியே பதிவு செய்ய உதவியாக இருக்கும். இதில் 24.5 மெகா பிக்ஸெல் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. வை-பை இணைப்பு உள்ளதால் காட்சிகளைப் பதிவு செய்வதோடு அதை உடனடியாக பதிவேற்றவும் முடியும். 630 கிராம் எடையுடன் வந்துள்ள இந்த கேமராவின் விலை சுமார் ரூ.1.77 லட்சம்.


Next Story