சேட்டிலைட் இணையசேவை: எலான் மஸ்க்கை முந்தும் பாரதி ஏர்டெல்?

புளூம்பெர்க் பொருளாதார மாநாட்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் கலந்து கொண்டு பேசினார்.
சேட்டிலைட் இணையசேவை: எலான் மஸ்க்கை முந்தும் பாரதி ஏர்டெல்?
Published on: 

டெல்லியில் நடைபெற்று வரும் புளூம்பெர்க் பொருளாதார மாநாட்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் எலான் மஸ்க்கிற்கு முன்பே நாங்கள் செயற்கைக்கோள் தொலைதொடர்பு உரிமத்திற்கு விண்ணப்பித்து விட்டோம். அவருக்குச் சில நாட்களுக்கு முன்பாவது எங்களுக்கு அனுமதி கிடைத்தால் மகிழ்ச்சி", என கூறியுள்ளார்.

மேலும் அவர், தங்களின் 'யூட்ல்சாட்' ஒன்வெப் செயற்கைக்கோள்கள் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய வான்பரப்பில் தயாராக உள்ளதைச் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைதொடர்பு சேவையைத் தொடங்க அம்பானியின் ஜியோ, மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் ஏர்டெல்லின் ஒன்வெப் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், மிட்டலின் இந்த சவால் மிகுந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com