வேவ் திரீ, நோவா ஸ்மார்ட் கடிகாரம்


வேவ் திரீ, நோவா ஸ்மார்ட் கடிகாரம்
x

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அர்பன் நிறுவனம் `வேவ் திரீ’ மற்றும் `நோவா’ என்ற பெயர்களில் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.

வேவ் திரீ மாடல் கருப்பு மற்றும் கிரே வண்ணங்களிலான பிரேமைக் கொண்டவையாக வந்துள்ளது. உலோகம், பாலியுரித்தேன் மற்றும் பிரீமியம் சிலிக்கானால் ஆன ஸ்டிராப்புகளைக் கொண்டது. இவை 1.91 அங்குல தொடு திரை டயலைக் கொண்டவை. வெறுமனே நேரம் காட்டுபவையாக இல்லாமல் உடல் நலன் சார்ந்த தகவல்களை அளிப்பவையாகவும் இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக அளிக்கும். புளூடூத் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

நோவா மாடல் டிசைனர் வடிவமைத்த 9 வகையான ஸ்டிராப்புகளைக் கொண்டதாக வந்துள்ளது. இதில் 1.86 அங்குல திரை உள்ளது. இதய துடிப்பு, ரத்த அழுத்தம், தினசரி நடந்த நடை தூரம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும். குரல் வழிக் கட்டுப் பாட்டிலும் செயல்படும்.

வேவ் திரீ மாடல் விலை சுமார் ரூ.2,499. நோவா மாடல் விலை சுமார் ரூ.1,799.


Next Story