விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சேரன் நகரை சேர்ந்தவர் ஹரிகரசுதன். தனியார் நிறுவன ஊழியர். இவர் ஐஸ்வர்யாதேவி (வயது 22) என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

தொடர்ந்து தகராறு முற்றவே விரக்தி அடைந்த ஐஸ்வர்யா தேவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யாதேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திருமணம் ஆகி 11 மாதங்கள் மட்டும் ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com