திருவள்ளூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

திருவள்ளூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் சத்யா (வயது 19). இவர் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு திருவள்ளூரை அடுத்த காட்டு கூட்டுசாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் இதுநாள் வரையிலும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. கடந்த 5-ந்தேதியன்று மீண்டும் சத்யாவுக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அவர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த அவரது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சத்யா நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com