பொன்னமராவதி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கடன் தொல்லையால் நேர்ந்த பரிதாபம்

பொன்னமராவதி அருகே கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னமராவதி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கடன் தொல்லையால் நேர்ந்த பரிதாபம்
Published on

பொன்னமராவதி:

இளம்பெண் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவரது மனைவி திவ்யா (28). திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திவ்யா கடன் தொல்லையால் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் திவ்யா வீட்டில் உள்ள தனது அறையின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் திவ்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com