இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

விராலிமலை:

விராலிமலை தாலுகா நம்பம்பட்டி கிராமம் புரசம்பட்டியை சேர்ந்தவர் போதும்பொண்ணு. இவரது மகள் லலிதா (வயது 22). இவர் மணப்பாறை அருகே உள்ள தனியார் பஞ்சுமில்லில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த லலிதா வீட்டு வேலை செய்யாமல் இருந்ததால் தாய் போதும்பொண்ணு அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லலிதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் லலிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து லலிதாவின் தாயார் போதும்பொண்ணு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com